#ICCWTC ஃபைனல்: ஒருவழியா நியூசி.,யின் முதல் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு பிரேக் கொடுத்த அஷ்வின்

By karthikeyan VFirst Published Jun 20, 2021, 10:03 PM IST
Highlights

நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக டாம் லேதமை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா(34), ஷுப்மன் கில்(28), விராட் கோலி(44), ரஹானே(49) ஆகிய நால்வரும் சிறப்பாக ஆடினர். ஆனால் அவர்களால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. நியூசிலாந்து அணிக்கு விக்கெட் தேவைப்பட்டபோதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்த கைல் ஜாமிசன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகிய 4 முன்னணி பவுலர்களின் பவுலிங்கையும் திறம்பட எதிர்கொண்டு சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா ஆகிய ஃபாஸ்ட் பவுலர்களால் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஷமியும் பும்ராவும் சில வாய்ப்புகளை உருவாக்கினாலும், விக்கெட் விழவில்லை. லேதமும் கான்வேவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர்.

ஒருவழியாக 35வது ஓவரில் டாம் லேதமை 30 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் அஷ்வின். இதையடுத்து கான்வேவுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

click me!