டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்தின் டாப் பவுலர் கைல் ஜாமிசன்.. அபார சாதனை

By karthikeyan VFirst Published Jun 20, 2021, 8:43 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்திய கைல் ஜாமிசன் சாதனை படைத்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா(34), ஷுப்மன் கில்(28), விராட் கோலி(44), ரஹானே(49) ஆகிய நால்வரும் சிறப்பாக ஆடினர். ஆனால் அவர்களால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை. நியூசிலாந்து அணிக்கு விக்கெட் தேவைப்பட்டபோதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்த கைல் ஜாமிசன் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த ஃபைனல் தான் ஜாமிசனின் 8வது சர்வதேச டெஸ்ட் போட்டி. அதற்குள்ளாக, ஒரு இன்னிங்ஸில் 5வது முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். இன்று வீழ்த்திய 5 விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தம் 44 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஜாமிசன்.

இதன்மூலம் முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து பவுலர் என்ற சாதனையை ஜாமிசன் படைத்துள்ளார். இதற்கு முன், ஜாக் கௌல் முதல் 8 டெஸ்ட்டில் 41 விக்கெட்டுகளையும், ஷேன் பாண்ட் 38 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
 

click me!