#IPL2021 ஐபிஎல் 14வது சீசனிலிருந்து அஷ்வின் திடீர் விலகல்..! இதுதான் காரணம்

Published : Apr 26, 2021, 08:12 AM IST
#IPL2021 ஐபிஎல் 14வது சீசனிலிருந்து அஷ்வின் திடீர் விலகல்..! இதுதான் காரணம்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனிலிருந்து டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் விலகியுள்ளார்.  

இந்தியாவில் கொரோனா 2ம் அலைக்கு மத்தியில் ஐபிஎல் 14வது சீசன் நடத்தப்பட்டுவருகிறது. இந்த சீசன் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும்  நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடிவரும் தமிழகத்தை சேர்ந்த சீனியர் ஸ்பின்னரான அஷ்வின், ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகியுள்ளார்.

ஐபிஎல் 14வது சீசன் அஷ்வினுக்கு, ஆடியவரை சரியாக அமையவில்லை. அஷ்வின் இந்த சீசனில் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். முதல் சில போட்டிகளை மும்பையில் ஆடிய டெல்லி அணி, 2 போட்டிகளை சென்னையில் ஆடியது. 

அதற்காக டெல்லி அணியுடன் சென்னை வந்த அஷ்வின், சென்னையில் நடந்த 2 போட்டிகளில் ஆடிய நிலையில், சன்ரைசர்ஸுக்கு எதிராக டெல்லி அணி நேற்று ஆடிய போட்டி தான் இந்த சீசனில் சென்னையில் நடக்கும் கடைசி போட்டி. இதையடுத்து அந்த போட்டியுடன் இந்த சீசனிலிருந்து விலகினார் அஷ்வின்.

கொரோனாவுக்கு எதிராக போராடி கொண்டிருக்கும் தனது குடும்பத்துடன், தான் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த சீசனிலிருந்து இத்துடன் விலகுவதாக டுவிட்டரில் தெரிவித்த அஷ்வின், நிலைமை சீரடைந்தால், திரும்ப வருவதாக தெரிவித்துள்ளார்.

குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதற்காக இந்த சீசனிலிருந்து அஷ்வின் விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று டெல்லி கேபிடள்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!