ஹர்பஜன் சிங்கை அலேக்கா தூக்கியடிக்கப்போகும் அஷ்வின்..! செம ரெக்கார்டு வெயிட்டிங்

By karthikeyan VFirst Published Jan 31, 2021, 10:12 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீனியர் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்பஜன் சிங்கின் ரெக்கார்டை தகர்க்கவுள்ளார்.
 

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். 74 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 377 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பவுலர் என்ற பெருமைக்கு உரியவராக திகழ்கிறார்.

அனில் கும்ப்ளே, கபில் தேவ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய மூவருக்கு அடுத்து அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் அஷ்வின். இதுவரை 377 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், இந்தியாவில் மட்டுமே 254 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங்கின்(265) சாதனையை முறியடிக்க, அஷ்வினுக்கு இன்னும் 12 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்திய மண்ணில் ஹர்பஜன் சிங்கைவிட அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.
 

click me!