கும்ப்ளேவை போல் பந்துவீசி அசத்திய பும்ரா..! வீடியோவை பார்த்து பாராட்டிய கும்ப்ளே

Published : Jan 31, 2021, 09:43 PM IST
கும்ப்ளேவை போல் பந்துவீசி அசத்திய பும்ரா..! வீடியோவை பார்த்து பாராட்டிய கும்ப்ளே

சுருக்கம்

இந்திய அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் பும்ரா, முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளேவை போன்று பந்துவீசிய வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர, அதைக்கண்ட அனில் கும்ப்ளே, பும்ராவை பாராட்டியதுடன், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.  

ஆஸி., மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் இங்கிலாந்தை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 டெஸ்ட் சென்னையிலும் கடைசி 2 டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளன.

அதற்காக சென்னை வந்துள்ள இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் முதல் டெஸ்ட்டுக்கு முன்பாக சென்னையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் வலைப்பயிற்சியின்போது பும்ரா, இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் அனில் கும்ப்ளேவின் பவுலிங் ஆக்‌ஷனை போன்று செய்து காட்டினார். கும்ப்ளேவை போலவே பந்துவீசினார் பும்ரா. அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்தது.

 அதைக்கண்ட அனில் கும்ப்ளே, சூப்பர் பும்ரா.. கிட்டத்தட்ட எனது ஆக்‌ஷனை நெருங்கிவிட்டாய்.. உனது பவுலிங் ஆக்‌ஷனை வளர்ந்துவரும் இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் இமிடேட் செய்யுமளவிற்கு முன்மாதிரியாக இருக்கிறாய் நீ.. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று கும்ப்ளே ரியாக்ட் செய்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!