இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Oct 27, 2023, 10:30 AM IST

ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ள நிலையில், அவருக்குப் பதிலாக அவரது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.


வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கணுக்கால் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெறவில்லை. மேலும், அவர் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது. ஆதலால், நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெற்றார். பவுலிங்கை பலப்படுத்தும் வகையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக முகமது ஷமி இடம் பெற்றார்.

தனிநபர் பிரிவில் கை இல்லாத வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி தங்கம் வென்று சாதனை!

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இடம் பெறமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி லக்னோ மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிரான 29ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது. இதில், ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக இந்திய அணியின் பிளேயிங் 11ல் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் ஐபிஎல் ஏலம் – எப்போது நடக்கிறது தெரியுமா?

லக்னோவின் ஆடுகளம் மெதுவாக உள்ளது. ஆகையால், அஸ்வினுக்கு இங்கு முன்னுரிமை கொடுக்கலாம்.  எனவே, அவர் பிளேயிங் 11ல் இடம் பெறலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடினார். அவர் இதுவரை 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறப்பான ஆட்டமாகும். அஸ்வின் 63 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 707 ரன்கள் எடுத்துள்ளார்.

ENG vs SL: 1996க்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் தோல்வி அடைந்த இங்கிலாந்து!

இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், ரன் ரேட் அடிப்படையிலும் பின் தங்கியுள்ளது. இனி வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்புக்கு மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை நம்பியிருக்கும் நிலை ஏற்படும்.

England vs Sri Lanka: இலங்கை எளிய வெற்றி பெற்று சாதனை – புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

click me!