இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக இந்தியாவில் 350ஆவது விக்கெட் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 2ஆவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆவது நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், குல்தீப் யாதவ் 131 பந்துகள் நின்று 2 பவுண்டரி உள்பட 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒரு பவுலர் 131 பந்துகள் வரையில் நின்று விளையாடியது இதுவே முதல் முறையாகும். அடுத்து வந்த ஆகாஷ் தீப் தன் பங்கிற்கு 29 பந்துகள் வரையில் நின்று ஒரு சிக்ஸர் உள்பட 9 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். கடைசி வரை நிதானமாக விளையாடிய துருவ் ஜூரெல் 149 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரி உள்பட 90 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் மாறி மாறி பந்து வீசினர். இதில், அஸ்வின் வீசிய 4.5ஆவது பந்தில் பென் டக்கெட் 15 ரன்களில் சர்ஃபராஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன் மூலமாக இந்திய மண்ணில் தனது 350ஆவது விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச டெஸ்ட்டில் 503ஆவது விக்கெட் எடுத்தார். அடுத்த பந்திலேயே ஆலி போப் விக்கெட்டையும் எல்பிடபிள்யூ முறையில் கைப்பற்றினார். அடுத்து ஹாட்ரிக் விக்கெட்டிற்கு முயற்சித்த நிலையில் அதற்கு பலனில்லை. எனினும் அணில் கும்ப்ளேயின் 350 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். கும்ப்ளே 63 போட்டிகளில் 350 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில், அஸ்வின் 59 டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 350, மற்றும் 351ஆவது விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்திய மண்ணில் ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளும், கபில் தேவ் 219 விக்கெட்டுகளும், ரவீந்திர ஜடேஜா 210* விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
HISTORY IN RANCHI...!!!
Ravi Ashwin has taken most Test wickets in India. 🇮🇳 pic.twitter.com/bJhyYHHukn