2-3 பாராசிட்டமலை போட்டு போய் வேலைய பாருங்க டிராவிட்..! ரவி சாஸ்திரி அதிரடி

By karthikeyan VFirst Published Aug 23, 2022, 6:38 PM IST
Highlights

ஆசிய கோப்பைக்கு முன்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாக ராகுல் டிராவிட் கொரோனாவிலிருந்து மீண்டு இந்திய அணியுடன் இணைந்துவிடுவார் என்று ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆசிய கோப்பையில் ஆடும் இந்திய அணி இன்று துபாய்க்கு கிளம்பி சென்றது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.

இதையும் படிங்க - சச்சின் டெண்டுல்கரின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்தெறிந்த ஷுப்மன் கில்..!

ஆசிய கோப்பையில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் வரும் 28ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது. எனவே அவர் இந்திய அணியுடன் இணைந்து துபாய்க்கு செல்லவில்லை. 

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியுடன் அமீரகம் செல்வதற்காகத்தான் ஜிம்பாப்வே தொடரில் கூட பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செல்லாமல், விவிஎஸ் லக்‌ஷ்மண் சென்றார். ஆனால் இப்போது கொரோனா காரணமாக இந்திய அணியுடன் ராகுல் டிராவிட் செல்ல முடியாமல் போயிற்று. ஆனால் 2 நாட்கள் கழித்து மீண்டும் எடுக்கப்படும் டெஸ்ட்டில் ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தால், அவர் உடனடியாக துபாய் சென்றுவிடுவார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 28ம்தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க - இந்திய அணிக்கு பயம் காட்டிய சிக்கந்தரின் விக்கெட்டை கொண்டாடாமல் பாராட்டி அனுப்பிய இந்தியவீரர்கள்! வைரல் வீடியோ

இந்நிலையில், ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டிராவிட்டுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது இந்திய அணிக்கு சற்றே கவலையளிக்கும் விஷயம் தான். டிராவிட் சில பாராசிட்டமல் மாத்திரைகளை போட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு எதிரான  போட்டிக்கு முன் இந்திய அணியுடன் இணையவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

click me!