Ravi Shastri: இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் ஒரு பந்து கூட நான் பார்க்கல..! சாஸ்திரி தடாலடி

Published : Jan 25, 2022, 03:24 PM ISTUpdated : Jan 25, 2022, 03:46 PM IST
Ravi Shastri: இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் ஒரு பந்து கூட நான் பார்க்கல..! சாஸ்திரி தடாலடி

சுருக்கம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரில் ஒரு பந்தைக்கூட பார்க்கவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.  

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என தென்னாப்பிரிக்காவிடம் இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் 3-0 என ஒயிட்வாஷ் ஆனது.

டெஸ்ட் தொடரில் தோற்றிருந்தாலும், ஒருநாள் தொடரில் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் ஏமாற்றமளித்து ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமான தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 தொடர்களையும் இழந்தது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடரில் ஒரு பந்தைக்கூட பார்க்கவில்லை என்று தடாலடியாக தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் கேப்டன்சி விலகல் முடிவு குறித்து பேசிய ரவி சாஸ்திரி, விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது அவரது தனிப்பட்ட முடிவு. பெரிய பெரிய வீரர்கள் பலரும் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளனர். கவாஸ்கர், சச்சின், தோனி ஆகியோர் வரிசையில் இப்போது விராட் கோலியும் பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியிலிருந்து விலகியிருக்கிறார் என்று ரவி சாஸ்திரி கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!