டி20 கிரிக்கெட்டில் செம ரெக்கார்டு.. புதிய மைல்கல்லை எட்டி சாதனை பட்டியலில் இணைந்தார் ஷகிப் அல் ஹசன்

Published : Jan 24, 2022, 09:57 PM IST
டி20 கிரிக்கெட்டில் செம ரெக்கார்டு.. புதிய மைல்கல்லை எட்டி சாதனை பட்டியலில் இணைந்தார் ஷகிப் அல் ஹசன்

சுருக்கம்

டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது வீரர்  என்ற சாதனையை படைத்துள்ளார் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன்.  

வங்கதேசத்தின் சீனியர் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். அந்த அணியின் முக்கியமான வீரரான ஷகிப் அல் ஹசன் வங்கதேச அணிக்காக காலங்காலமாக பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் சிறந்த ஆல்ரவுண்டர்.

ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி20 கிரிக்கெட் மட்டுமல்லாது, ஐபிஎல், வங்கதேச பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பிக்பேஷ் லீக் உட்பட பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஃபார்டியூன் பரிஷால் அணிக்காக விளையாடும் ஷகிப் அல் ஹசன், மினிஸ்டர் க்ரூப் தாக்கா அணிக்கெதிரான போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது 400வது விக்கெட் ஆகும்.

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் (சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் போட்டிகள்) 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய 5வது பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

உலகம் முழுதும் நடத்தப்படும் பல்வேறு டி20 லீக் தொடர்களில் ஆடிவரும் வீரர்கள் தான் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 554 விக்கெட்டுகளுடன் ட்வைன் பிராவோ முதலிடத்தில் உள்ளார். 435 விக்கெட்டுகளுடன் இம்ரான் தாஹிர் 2ம் இடத்திலும், 425 விக்கெட்டுகளுடன் சுனில் நரைன் 3ம் இடத்திலும், 420 விக்கெட்டுகளுடன் ரஷீத் கான் 4ம் இடத்திலும் உள்ளனர். 400 விக்கெட்டுகளுடன் ஷகிப் அல் ஹசன் 5ம் இடத்தில் உள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!