இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! வார்னருக்கு ரெஸ்ட்.. 3 வீரர்கள் கம்பேக்

By karthikeyan VFirst Published Jan 25, 2022, 2:41 PM IST
Highlights

இலங்கைகு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என வென்று அசத்தியது ஆஸ்திரேலிய அணி. ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக சொந்த மண்ணில் இலங்கையை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கை அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் பிப்ரவரி 11ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. அதற்கடுத்து ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடுகிறது. 

இலங்கைக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான இந்த டி20 அணியில் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் மற்றும் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

பிக்பேஷ் லீக்கில் அபாரமாக விளையாடி 150 ஸ்டிரைக் ரேட்டில் 577 ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் பென் மெக்டெர்மோட்டுக்கு ஆஸ்திரேலிய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. டிராவிஸ் ஹெட், ஆல்ரவுண்டர் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் ஜெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய மூவருக்கும்  ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்துக்காக தயாராவதற்காக ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஓய்வு எடுத்துள்ளார். எனவே இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்ட் செயல்படவுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அஷ்டான் அகர், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், ஜோஷ் இங்லிஸ், பென் மெக்டெர்மோட், க்ளென் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஆடம் ஸாம்பா.
 

click me!