இந்தியா உலகக் கோப்பை ஜெயிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக யஷஸ்வி ஜெய்ஷ்வால் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி தேர்வுக்குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது வரையில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. இதில், ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றி தேடிக் கொடுக்கின்றனர். அதில் யஷஸ்வி ஜெய்ஷ்வால், திலக் வர்மா, ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங் என்று ஒவ்வொரு வீரரையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
குஜராத் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரஷீத் கான்!
இரண்டு முறை கொல்கத்தாவை வெற்றிப் பாதைகு அழைத்துச் சென்றவர் ரிங்கு சிங். கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த பந்துகளில் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். அதே போன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் அர்ஷ்தீப் ஓவரில் கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவரை மிஞ்சும் அளவிற்கு தனது அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெயிக்க வைத்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். கடந்த 2020 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர்.
கடைசியாக கொடுத்த வாய்ப்பு: நிரூபித்து காட்டிய விஷ்ணு வினோத்!
மும்பைக்கு எதிராக நடந்த 1000ஆவது ஐபிஎல் போட்டியில் 62 பந்துகளில் 124 ரன்களை குவித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். ஆனால், இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை தழுவியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 98 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவர்களது வரிசையில் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள ஜித்தேஷ் சர்மா உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பையிலும் சரி, 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பையிலும் சரி இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வுக் குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
3ஆவது இடத்தில் மும்பை: இக்கட்டான நிலையில் LSG, RR, RCB, PBKS!