IPL 2023: SRH vs LSG போட்டி டாஸ் ரிப்போர்ட்..! லக்னோ அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

Published : May 13, 2023, 03:42 PM IST
IPL 2023: SRH vs LSG போட்டி டாஸ் ரிப்போர்ட்..! லக்னோ அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

சுருக்கம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.   

ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருப்பதால் ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். சனிக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு இனி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பில்லை. ஆனால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதால், அந்த வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது.

IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

ஹைதராபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் அணியில் சன்வீர் சிங் என்ற பவுலர் இம்பேக்ட் பிளேயராக அறிமுகமாகிறார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தீபக் ஹூடா மற்றும் மோசின் கானுக்கு பதிலாக பிரெரக் மன்கத், யுத்விர் சிங் ஆகிய இருவரும் களமிறங்குகின்றனர். 

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், கைல் மேயர்ஸ், க்ருணல் பாண்டியா (கேப்டன்), பிரெரக் மன்கத், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், அமித் மிஷ்ரா, யஷ் தாகூர், ரவி பிஷ்னோய், யுத்விர் சிங், ஆவேஷ் கான். 

IPL 2023: பஞ்சாப் கிங்ஸுக்கு முக்கியமான போட்டி.. டெல்லி கேபிடள்ஸுடன் மோதல்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: 

அபிஷேக் ஷர்மா, அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், டி.நடராஜன், மயன்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபஸல்ஹக் ஃபரூக்கி.  
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asia Cup 2026: இந்திய பவுலர்கள் சுழலில் சிக்கிய பாகிஸ்தான்... வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்!
Rohit Sharma Records: பேட்டை சுழற்றினாலே ரெக்கார்டு! உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் அதிரடி சாதனைகள் முழு பட்டியல்