ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய முக்கியமான போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. பிளே ஆஃபிற்கு முன்னேற சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸும் 14 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.
ஆனாலும் ராஜஸ்தான், லக்னோ, ஆர்சிபி, பஞ்சாப், கேகேஆர் அணிகளுக்கும் பிளே ஆஃப் வாய்ப்பிருப்பதால் அனைத்து அணிகளும் கடுமையாக போராடுவதால் சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியும் புள்ளி பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இன்று பிற்பகல் நடக்கும் போட்டியில் லக்னோ - சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி கேபிடள்ஸுக்கு இழப்பதற்கு இனி எதுவுமில்லை. ஆனால் பஞ்சாப் கிங்ஸுக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். இந்த போட்டியில் வென்றால்தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க முடியும்.
ICC WTC ஃபைனல்: இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக தேர்வாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..?
டெல்லி அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)
டேவிட் வார்னர், ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மனிஷ் பாண்டே, ரைலீ ரூசோ, அக்ஸர் படேல், அமான் கான், லலித் யாதவ், ரிப்பல் படேல், குல்தீப் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் சர்மா.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ஜித்தேஷ் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராஸா, சாம் கரன், ஷாருக்கான், ரிஷி தவான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லிஸ்.