சச்சினையே பார்த்துருக்கேன்!ஆனால் சத்தியமா சொல்றேன், தோனி மாதிரி வீரரை என் வாழ்வில் பார்த்ததே இல்ல-ரவி சாஸ்திரி

By karthikeyan VFirst Published Jan 27, 2022, 4:03 PM IST
Highlights

தோனி மாதிரியான ஒரு கிரிக்கெட் வீரரை தனது வாழ்வில் பார்த்ததே இல்லை என்று கூறி தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் ரவி சாஸ்திரி.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் தோனி. ஒருநாள் உலக கோப்பை (2011), டி20 உலக கோப்பை (2007) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான தோனி, இந்திய அணியின் வெற்றிகரமாக கேப்டனாக திகழ்ந்தார்.

எந்த சூழலிலும் பதற்றமோ, கோபமோ படாமல், கூலாக இருந்து வீரர்களை திறம்பட கையாண்டு, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவந்து வெற்றிகளை பறிக்கும் வித்தைக்காரர் தோனி. 

அதிருப்தி - சந்தோஷம் - ஆக்ரோஷம் - கோபம் என எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதவர் தோனி. ஆட்டத்தின் போக்கை கணித்து, அணியை அருமையாக வழிநடத்தியவர் தோனி. தோனி கேப்டன்சியிலிருந்து விலகிய பின்னரும் கூட, அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களுக்கு பெரியளவில் உதவியவர்.

சிலர் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வர்; சிலர் நல்ல பவுலர்களாக இருப்பார்கள். ஆனால் தோனி ஒரு முழுமையான கிரிக்கெட்டராக திகழ்ந்தவர். 

இந்நிலையில், தோனி பற்றி அக்தரின் யூடியூப் சேனலில் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி வேற லெவல் கிரிக்கெட்டர். என் வாழ்க்கையில் தோனி மாதிரியான ஒரு வீரரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததேயில்லை. ரன்னே அடிக்காவிட்டாலும் சரி அல்லது சதமடித்தாலும் சரி, உலக கோப்பையை வென்றாலும் சரி அல்லது முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் சரி, அதெல்லாம் தோனிக்கு ஒரு விஷயமே கிடையாது. சத்தியமாக சொல்கிறேன்.. தோனி மாதிரி யாருமே கிடையாது. சச்சின் டெண்டுல்கரைக்கூட பார்த்திருக்கிறேன். சச்சினும் மிகப்பொறுமையானவர். ஆனால் அவரே கூட சில சமயங்களில் கோபப்பட்டிருக்கிறார். ஆனால் தோனி கோபப்பட்டதே கிடையாது. எதைப்பற்றியுமே தோனி கவலைப்படமாட்டார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

click me!