Ravi Shastri on Bumrah: பும்ராலாம் கேப்டன்சிக்கு சரியா வரமாட்டார்..! கறாரா பேசிய சாஸ்திரி

By karthikeyan VFirst Published Jan 27, 2022, 5:33 PM IST
Highlights

பும்ரா கேப்டன்சிக்கெல்லாம் சரிவரமாட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

டி20, ஒருநாள் அணிகளின் கேப்டன்சியை தொடர்ந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகினார். ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு, திடீரென டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி.

டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவே நியமிக்கப்படுவார். ஆனாலும் யாரை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் பெயர்களை கேப்டன்சிக்கு பரிந்துரைக்கின்றனர் சில முன்னாள் வீரர்கள்.

பேட்ஸ்மேனைத்தான் கேப்டனாக நியமிக்க வேண்டுமா? ஏன் ஃபாஸ்ட் பவுலரை கேப்டனாக நியமிக்கக்கூடாதா? கபில் தேவ் ஃபாஸ்ட் பவுலர் தான். அவர் சிறந்த கேப்டனாக திகழவில்லையா? பாகிஸ்தானில் வாசிம் அக்ரம், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் ஆகியோர் கேப்டனாக இருந்திருக்கின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களை கேப்டனாக பரிசீலிப்பதில்லை. இந்த டிரெண்ட் மாறவேண்டும். ஃபாஸ்ட் பவுலர்கள் எப்போதுமே வெற்றிக்காகத்தான் ஆடுவார்கள். எனவே பும்ராவை துணை கேப்டனாக நியமித்து, அவரை அடுத்த கேப்டனாக இந்திய அணி உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஷோயப் அக்தர் கருத்து கூறியிருந்தார்.

தனது யூடியூப் சேனலில் ரவி சாஸ்திரியுடனான உரையாடலில், இதுகுறித்து கேள்வியும் எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரவி சாஸ்திரி, கண்டிப்பாக பும்ராவை கேப்டனாக்குவது பற்றி நான்  யோசித்ததே இல்லை. இந்திய அணியை பொறுத்தமட்டில் ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருப்பது கடினம். ஒரு ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருக்க வேண்டுமென்றால் அவர் ஆல்ரவுண்டராக இருக்க வேண்டும். பாப் வில்லிஸ் மாதிரியான வீரராக இருக்கவேண்டும். அவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன், போட்டிகளை ஜெயிக்கவே பார்ப்பார். ஒரு ஃபாஸ்ட் பவுலர் அரிதினும் அரிதாகத்தான் நீண்டகாலம் ஆடுவார். கபில் தேவ், இம்ரான் கான், சர் கார்ஃபீல்ட் மாதிரியான ஆல்ரவுண்டர்களாக இருந்தால் மட்டுமே கேப்டனாக செயல்பட முடியும் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
 

click me!