India vs West Indies: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு ஃபாஸ்ட் பவுலருக்கு வாய்ப்பு

Published : Jan 27, 2022, 04:36 PM IST
India vs West Indies: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு! 2 ஆண்டுகளுக்கு பிறகு ஃபாஸ்ட் பவுலருக்கு வாய்ப்பு

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள்  போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கைரன் பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியன் ஆலன், பானர், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன், ஷேய் ஹோப், பிரண்டன் கிங் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஃபாஸ்ட் பவுலர்களாக அல்ஸாரி ஜோசஃப், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஒடீன் ஸ்மித் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர்.

2019ம் ஆண்டுக்கு பிறகு எந்தவிதமான வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடிராத ஃபாஸ்ட் பவுலர் கீமார் ரோச் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். இந்தியாவில் முதல் சில ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த அவர் தேவை என்ற விதத்தில் ரோச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி:

கைரன் பொல்லார்டு (கேப்டன்), ஃபேபியன் ஆலன், பானர், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷேய் ஹோப், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன், கீமார் ரோச், ரொமாரியோ ஷெஃபெர்டு, ஒடீன் ஸ்மித், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.
 

PREV
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: தோனியுடன் ரகசிய சந்திப்பா? மும்பையை விட்டு சென்னைக்கு வரும் ஹர்திக் பாண்டியா!
Abhishek Sharma: சரவெடியாக வெடித்து சிதறிய அபிஷேக்..! 91 பந்துகளில் 25 சிக்சர், 233 ரன்கள் குவிப்பு