ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த தோனி கூட இப்படி ஒரு ஹெலிகாப்டரை பறக்கவிட்டது இல்ல.. ரஷீத்தின் வேற லெவல் வீடியோ

By karthikeyan VFirst Published Mar 4, 2020, 10:53 AM IST
Highlights

ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு பெயர்போன தோனியே, அடிக்காத அளவிற்கு தான் அடித்த ஒரு வித்தியாசமான ஹெலிகாப்டர் ஷாட்டை ரஷீத் கான் பகிர்ந்துள்ளார்.
 

டெத் ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடாமல் தடுப்பதற்காக ஃபாஸ்ட் பவுலர்கள் யார்க்கர்களை வீசுவார்கள். ஆனால் துல்லியமான யார்க்கர்களை கூட தோனி ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸருக்கு அனுப்புவார். கைகளின் மணிக்கட்டுகளை சுழற்றி முழு பவருடன் தோனி அடிக்கும் ஷாட் மிஸ்ஸே ஆகாது. தோனியின் இந்த ஷாட் ஹெலிகாப்டர் ஷாட் என்று அழைக்கப்படுகிறது. 

கடந்த காலங்களை போல அல்லாமல், மாடர்ன் டே கிரிக்கெட்டில் பல வித்தியாசமான ஷாட்டுகள் ஆடப்படுகின்றன. அவற்றில் தோனி கண்டுபிடித்த ஹெலிகாப்டர் ஷாட்டும் ஒன்று. தோனி அறிமுகப்படுத்திய அந்த ஷாட்டை அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், ரஷீத் கான் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக ஆடிவருகின்றனர். 

ஐபிஎல் 13வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரஷீத் கான், தான் அடித்த வித்தியாசமான ஹெலிகாப்டர் ஷாட்டை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இது ஹெலிகாப்டர் ஷாட் என்றுதான் நினைக்கிறேன்.. ஆனால் இதை ஹெலிகாப்டர் ஷாட் என்று அழைக்கமுடியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார். 

Also Read - 37 பந்தில் அதிரடி சதம்.. செம கெத்தா கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா.. வீடியோ

பொதுவாக ஸ்டம்புக்கு நேராக வரும் யார்க்கரை லெக் திசையில்(லாங் ஆன், மிட் விக்கெ திசையில்) தான் ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் பந்துகள் பறக்கவிடப்படும். ஆனால் ரஷீத் கான் ஹெலிகாப்டர் ஷாட்டின் மூலம் பந்தை தேர்டு மேன் திசையில் வித்தியாசமாக அடித்தார். அந்த ஷாட்டின் வீடியோ இதோ.. 

Do you call it helicopter?? I think soo 🤔🤔🚁 pic.twitter.com/DXYL15TSS1

— Rashid Khan (@rashidkhan_19)
click me!