2வது இன்னிங்ஸின் நாயகன் ஷமி வெறும் 3 ஓவர் மட்டுமே வீசியது ஏன்..? இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Mar 2, 2020, 4:54 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது இன்னிங்ஸின் நாயகனான ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்று நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. 

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டரை நாளில் முடிந்தது. அந்தளவிற்கு இந்திய அணி படுமோசமாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடி 242 ரன்கள் அடித்த இந்திய அணி, நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு சுருட்டியது. 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி வெறும் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 132 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, 36 ஓவரில் வெறும் 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் பொதுவாகவே அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்துபவர் ஷமி. அப்படியிருக்கையில், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி வெறும் 3 ஓவர்கள் மட்டுமே வீசினார். 

Also Read - கோலி இல்லாம கூட இந்தியா ஜெயிச்சுடும்.. ஆனால் அவரு இல்லாம..? சான்ஸே இல்ல

 ஷமி அதிக ஓவர்கள் வீசாததற்கு காரணம், அவரது காயம். ஆம்... இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடும்போது, டிரெண்ட் போல்ட்டின் பவுன்ஸரில் தோள்பட்டையில் அடிவாங்கினார். அப்போதே அவருக்கு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரியளவில் காயம் ஏதுமில்லாததால், இரண்டாவது இன்னிங்ஸில் 3 ஓவர்கள் வீசினார். ஆனால் பந்துவீச திணறுவதை கண்ட கேப்டன் கோலி, ஷமியை அனுப்பிவிட்டார். அதனால்தான் ஷமி அதிக ஓவர்களை வீசவில்லை. 
 

click me!