கோலி இல்லாம கூட இந்தியா ஜெயிச்சுடும்.. ஆனால் அவரு இல்லாம..? சான்ஸே இல்ல

By karthikeyan VFirst Published Mar 2, 2020, 4:45 PM IST
Highlights

ரோஹித் சர்மா காயத்தால் விலகிய பிறகு, நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை மட்டுமே தழுவியதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் சுட்டிக்காட்டியுள்ளார். 
 

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து 5-0 என வென்றது இந்திய அணி. நியூசிலாந்து அருமையான தொடக்கத்தை பெற்று தொடரை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் படுதோல்விகளை சந்தித்து படுமோசமாக சுற்றுப்பயணத்தை முடித்தது. 

ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, டெஸ்ட் தொடரில் படுமோசமாக சொதப்பியது. 2 டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங்கில் சொதப்பியது. 2 டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்கள் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஒரே இன்னிங்ஸில் மட்டுமே 200 ரன்களை கடந்தது. மற்ற 3 இன்னிங்ஸ்களிலும் 200 ரன்களைக்கூட அடிக்கவில்லை. 

2-0 என டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இந்நிலையில், இந்திய அணி ரோஹித் சர்மா காயத்தால் விலகிய பிறகு, ஒரேயொரு டி20ஐ தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவியதை இயன் சேப்பல் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் சேப்பல், ஒருநாள் தொடரின் சோகம் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரிலும் தொடர்ந்துவிட்டது. இது தற்செயலாகக்கூட இருக்கலாம். ஆனால் பாருங்கள்.. இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோஹித் சர்மா, காயத்தால் வெளியேறிய பிறகு, ஒரேயொரு டி20ஐ தவிர இந்திய அணி ஒரு போட்டியில் கூட ஜெயிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Also Read - புடுங்கிட்டு பறந்த ஸ்டம்ப்.. பும்ரா கம்பேக்.. செம வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க

ரோஹித்தை ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணி இழந்ததைவிட, கேப்டன் கோலிக்கு ஒரு நல்ல ஆலோசகரை இழந்தார் என்பதுதான், அணியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்கட்டான சூழல்களில் ஆலோசனை வழங்குவதற்கும் எதிரணிக்கு எதிரான திட்டங்களை வகுப்பதிலும் ரோஹித் பங்களிப்பு செய்யமுடியாமல் போனது அணிக்கு பெரிய பாதிப்பாக அமைந்துவிட்டது. அதேபோல நல்ல ஃபார்மில் ரோஹித் சர்மா ஆடிக்கொண்டிருந்த நிலையில், காயத்தால் விலகியது பெரும் இழப்பு. கோலி இல்லாத போட்டிகளில் ஒரு கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். ஆனால் ரோஹித் இல்லாமல் கோலி அதிகமான தோல்விகளை மட்டுமே பெற்றுள்ளார். 
 

click me!