புடுங்கிட்டு பறந்த ஸ்டம்ப்.. பும்ரா கம்பேக்.. செம வீடியோ மிஸ் பண்ணாம பாருங்க

By karthikeyan VFirst Published Mar 2, 2020, 3:19 PM IST
Highlights

பும்ராவின் பவுலிங்கில் நியூசிலாந்து தொடக்க வீரர் டாம் பிளண்டெலின் ஆஃப் ஸ்டம்ப் கழண்டு காற்றில் டைவ் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா, காயம் காரணமாக கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த தொடர்களில் ஆடவில்லை. காயத்திலிருந்து மீண்ட பும்ரா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடந்த டி20 தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பினார். 

இலங்கை தொடர், அதற்கடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், பின்னர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் என இவை மூன்றுமே பும்ராவிற்கு சரியாக அமையவில்லை. காயத்திற்கு பின்னர் பும்ராவின் பவுலிங் முன்புபோல இல்லை. அதற்கு உடற்தகுதியும் ஒரு காரணம். பும்ராவின் பவுலிங்கை இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணி வீரர்களுமே அடித்து ஆடினர். 

பும்ராவின் பவுலிங் எடுபடாததும், கோலி பேட்டிங்கில் சொதப்பியதும்தான், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஒயிட்வாஷ் ஆக முக்கியமான காரணங்கள். 

பும்ராவின் பவுலிங் முன்புபோல் மிரட்டவில்லை என்பது வேதனையான விஷயமாக இருந்துவந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் டாம் பிளண்டெலின் ஸ்டம்ப்பை பும்ரா புடுங்கி வீசிய விதம், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்துவிட்டார் என்ற நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கும் ரசிகர்களுக்கும் அளித்துள்ளது. 

132 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு அந்த இலக்கை அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து தொடரையும் வென்றது. 

நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் டாம் பிளண்டெல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். டாம் லேதமை 52 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்த, கேன் வில்லியம்சனையும் டாம் பிளண்டெலையும் பும்ரா வீழ்த்தினார். இதில் டாம் பிளண்டெலின் விக்கெட் அபாரமானது. பும்ராவின் துல்லியமான வேகத்தில் சமாளிக்க முடியாமல் போல்டானார். பும்ராவின் அதிவேகத்தில் கழண்ட ஆஃப் ஸ்டம்ப், காற்றில் பறந்தது. பும்ரா ஸ்டம்ப்பை புடுங்கி எறிந்தது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்த தென்னாப்பிரிக்க தொடரில் கண்டிப்பாக பும்ரா தனது வேகத்தின் மூலம் மிரட்டுவார் என நம்புவோம்..

pic.twitter.com/SYhXtsqI55

— Sports Freak (@SPOVDO)
click me!