இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு.. இளமையும் அனுபவமும் கலந்த செம டீம்

By karthikeyan VFirst Published Mar 2, 2020, 2:28 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் எதிர்கொண்டு ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியிடம் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் இந்தியாவிற்கு வருகிறது. அதேநேரத்தில், நியூசிலாந்தில் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மீண்டும் கெத்தை காட்டும்  முனைப்பில் உள்ளது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வரும் 29ம் தேதி நடக்கிறது. தர்மாசாலா, லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடக்கவுள்ளது. 

இந்த தொடர் இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், குயிண்டன் டி காக் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடாத டுப்ளெசிஸ், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.  அதேபோல வாண்டெர் டசனும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடவில்லை. 

கைல் வெரெய்ன், டேவிட் மில்லர், பவுமா, ஜேஜே ஸ்மட்ஸ், லுங்கி இங்கிடி பியூரன் ஹென்ரிக்ஸ், நோர்ட்ஜே, கேஷவ் மஹாராஜ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், அந்த அணியின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்து, இக்கட்டான நிலையிலிருந்து தென்னாப்பிரிக்காவை காப்பாற்றியதுடன் சதமும் விளாசிய ஹென்ரிச் கிளாசனும் அணியில் உள்ளார். 

இந்த தென்னாப்பிரிக்க அணி இளமையும் அனுபவமும் கலந்த நல்ல கலவையான அணியாக உள்ளது. டுப்ளெசிஸ், டி காக், டேவிட் மில்லர் ஆகியோர் இந்தியாவில் அதிகமாக ஆடிய அனுபவமுள்ளவர்கள் என்பதால், அவர்களுக்கு இந்தியாவின் கண்டிஷனும் ஆடுகளங்களும் பெரிய சவாலாக இருக்காது.

Also Read - உங்க பசங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல.. கேப்டன் கோலியை அழைத்து கண்டித்த அம்பயர்  

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா, வாண்டெர் டசன், ஃபாஃப் டுப்ளெசிஸ், கைல் வெரெய்ன், ஹென்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், ஜேஜே ஸ்மட்ஸ், ஃபெலுக்வாயோ, லுங்கி இங்கிடி, லூதோ சிபாம்லா, பியூரன் ஹென்ரிக்ஸ், ஆன்ரிச் நோர்ட்ஜே. ஜார்ஜ் லிண்டே, கேஷவ் மஹாராஜ். 
 

click me!