பாகிஸ்தானை பார்த்து காப்பி அடிக்கிறது இந்திய அணி - ரமீஸ் ராஜா

By karthikeyan V  |  First Published Feb 3, 2023, 5:38 PM IST

பாகிஸ்தான் அணியை பார்த்து இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கட்டமைப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார்.
 


இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்:

இந்திய அணி எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பேட்டிங் அணியாக திகழ்ந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்று அபாரமான பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பும்ராவின் வருகைக்கு பிறகு பவுலிங்கில் வலுவடைந்த இந்திய அணி, அதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளில் மிகச்சிறந்த இளம் ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட மிரட்டலான பவுலிங் அணியாகவும் வளர்ந்துள்ளது.

Tap to resize

Latest Videos

IND vs AUS டெஸ்ட் தொடர்: விராட் கோலிக்கு இர்ஃபான் பதான் உருப்படியான அட்வைஸ்

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ், ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா என நல்ல கலவையிலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது.  நல்ல வேகத்திலும், துல்லியமான யார்க்கர், வேரியேஷன் என அசத்துபவர் பும்ரா. இடது கை ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங். 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய உம்ரான் மாலிக். நல்ல வேகத்தில் ஸ்விங் செய்யக்கூடியவர் முகமது சிராஜ். சீம்-ஐ அருமையாக பயன்படுத்தி வீசும்  சீனியர் பவுலர் ஷமி. இப்படியாக அனைத்துவிதமான ஃபாஸ்ட் பவுலர்களையும் உள்ளடக்கிய யூனிட்டாக இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் திகழ்கிறது.

பாகிஸ்தானை பார்த்து இந்திய அணி காப்பி?

இந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து அதேபோல ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கட்டமைப்பதாக ரமீஸ் ராஜா கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா, இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து அதேபோல ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை கட்டமைக்கிறது. ஹாரிஸ் ராஃபை போல் வேகமாக வீசக்கூடிய உம்ரான் மாலிக், ஷாஹீன் அஃப்ரிடியை போல் இடது கை பவுலர் அர்ஷ்தீப் சிங், முகமது வாசிமை போல் மிடில் ஓவர்களை வீசுகிறார் ஹர்திக் பாண்டியா. ஷிவம் மாவி சப்போர்ட்டிங் பவுலர். இந்திய அணியின் ஸ்பின் பவுலிங் பாகிஸ்தானை விட சற்று சிறப்பாக உள்ளது என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் அடுத்த விராட் கோலி ஷுப்மன் கில் தான்..! இர்ஃபான் பதான் புகழாரம்

click me!