இந்திய மகளிர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம்..!

Published : May 13, 2021, 08:21 PM IST
இந்திய மகளிர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம்..!

சுருக்கம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த WV.ராமனின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

35 பேர் விண்ணப்பித்ததில், 8 பேரை தேர்வு செய்து, மதன்லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழு நேர்காணல் நடத்தியது. அதில், இந்திய அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் ரமேஷ் பவாரை மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்தது.

ரமேஷ் பவார் ஏற்கனவே 2018ம் ஆண்டில் மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!