டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் தொடக்க ஜோடி..!

Published : May 13, 2021, 07:09 PM ISTUpdated : May 13, 2021, 07:15 PM IST
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான இந்திய அணியின் தொடக்க ஜோடி..!

சுருக்கம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியில் ரோஹித்துடன் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.  

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஜூன் 18-22ல் நடக்கும் இறுதி போட்டிக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயன்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ரோஹித்துடன் மயன்க் - கில் ஆகிய இருவரில் யாரை தொடக்க வீரராக இறக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, கில், மயன்க் ஆகிய இருவரில் கில்லை ரோஹித்துடன் தொடக்க வீரராக இறக்கலாம். ஷுப்மன் கில் தான் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஆடினார். எனவே அவரையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தொடக்க வீரராக இறக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை: ஸ்ட்ராங் டீம் களமிறக்கிய ஆஸ்திரேலியா.. கம்மின்ஸ் விலகல்.. கேப்டன் யார்?
டி20 உலகக் கோப்பைக்காக ஹெய்சன்பெர்க் - அனிருத் கூட்டணியில் உருவான அடிபொலி பாடல்