லங்கா பிரீமியர் லீக் 2021: இந்தியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் நடத்த திட்டம்

By karthikeyan VFirst Published May 13, 2021, 6:57 PM IST
Highlights

லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்தப்படவுள்ளது.
 

லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடத்தப்படவுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போன்று, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு தான் லங்கா பிரீமியர் லீக் முதல் சீசன் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் காலக்கட்டத்தில் முதல் சீசன் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு 2வது சீசன் நடத்தப்படவுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு, ஜூலை 30ம் தேதி 2வது சீசன் தொடங்குகிறது. இந்திய அணி இலங்கைக்கு சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூலை 13 முதல் நடக்கும் அந்த தொடர் முடிந்ததும், ஜூலை 30ம் தேதி லங்கா பிரீமியர் லீக் 2வது சீசனை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

கொழும்பு கிங்ஸ், டம்புல்லா வைக்கிங், கல்லீ கிளாடியேட்டர்ஸ், ஜஃப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் ஆடுகின்றன. கடந்த சீசனில் ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
 

click me!