ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: தொடர்ச்சியாக 5வது ஆண்டாக இந்திய அணி முதலிடம்

By karthikeyan VFirst Published May 13, 2021, 3:30 PM IST
Highlights

ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ச்சியாக 5வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.
 

ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ச்சியாக 5வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது.

மே 1ம் தேதி வரையிலான காலங்களில் கிரிக்கெட் அணிகளின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதை அடிப்படையாகக்கொண்டு, வருடாந்திர ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்படுகிறது. அதன்படி, ஐசிசி தற்போது கடந்த ஆண்டிற்கான வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. 

அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம், தொடர்ச்சியாக 5வது ஆண்டாக, வருடாந்திர ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது. 2017 முதல் 2021 வரை தொடர்ந்து 5 முறை முதலிடத்தை தக்கவைத்துள்ளது இந்திய அணி. 

ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 2ம் இடத்திலும், 109 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3ம் இடத்திலும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி 4ம் இடத்திலும் உள்ளன.
 

click me!