ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசனில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்றைய போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்கியுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் ஆடி தலா 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 4வது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கியுள்ளன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
IPL 2023: ஐபிஎல்லில் ரோஹித் சர்மா புதிய சாதனை..! ஷிகர் தவானை பின்னுக்குத்தள்ளி முதலிடம்
இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக அபினவ் மனோகர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தொடர் தோல்விகள்..! ரிக்கி பாண்டிங்கை சீண்டிய சேவாக்
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், முகமது ஷமி, மோஹித்சர்மா.