IPL 2023: 15 ஆண்டுக்கு பின் கேகேஆருக்காக சதமடித்து வெங்கடேஷ் ஐயர் சாதனை! MIக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த KKR

By karthikeyan V  |  First Published Apr 16, 2023, 5:50 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி, வெங்கடேஷ் ஐயரின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 185 ரன்களை குவித்து, 186 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடேவில் தொடங்கி நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா இம்பேக்ட் பிளேயராக மட்டுமே ஆடுகிறார். அதனால் சூர்யகுமார் யாதவ் கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். 

Tap to resize

Latest Videos

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), டிம் டேவிட், நெஹல் வதேரா, அர்ஜுன் டெண்டுல்கர், ரித்திக் ஷோகீன், பியூஷ் சாவ்லா, டுயான் யான்சன், ரைலீ மெரிடித்.

IPL 2023: வலுவான் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், நிதிஷ் ராணா (கேப்டன்), நாராயண் ஜெகதீசன், ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி. 

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் நாராயண் ஜெகதீசன் (0) மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ்(8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் பொறுப்புடன் நிலைத்து நின்று அடித்து ஆடி சதமடித்தார். மறுமுனையில் நிதிஷ் ராணா(5), ஷர்துல் தாகூர்(13), ரிங்கு சிங் (18) ஆகியோர் சொதப்பினாலும் அபாரமாக பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயர் சதமடித்து கேகேஆர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டு முதல் போட்டியில் கேகேஆர் அணியில் ஆடிய பிரண்டன் மெக்கல்லம் சதமடித்து அசத்தினார். அதன்பின்னர் 15 ஆண்டுகளுக்கு பிறகு, சதமடித்த கேகேஆர் வீரர் என்ற சாதனையை வெங்கடேஷ் ஐயர்  படைத்தார். 

IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தொடர் தோல்விகள்..! ரிக்கி பாண்டிங்கை சீண்டிய சேவாக்

வெங்கடேஷ் ஐயரின் சதத்தால்(51 பந்தில் 104 ரன்கள்) 20 ஓவரில் 185 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 186 ரன்கள் என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!