
ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடக்கிறது. சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் ஆடுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹருக்கு பதிலாக கேஎம் ஆசிஃப் சேர்க்கப்பட்டுள்ளார். சீனியர் ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவுக்கு பதிலாக இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாகூர், கேஎம் ஆசிஃப், ஹேசில்வுட்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிட்டத்தட்ட பாதி அணியை மாற்றிவிட்டது. அந்த அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரியான் பராக், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் மோரிஸ் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே ஷிவம் துபே, க்ளென் ஃபிலிப்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஹிபால் லோம்ரார் மற்றும் கார்த்திக் தியாகி ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, ஆகாஷ் சிங் மற்றும் மயன்க் மார்கண்டே ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், டேவிட் மில்லர், ஷிவம் துபே, ராகுல் டெவாட்டியா, ஆகாஷ் சிங், சேத்தன் சக்காரியா, மயன்க் மார்கண்டே, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.