IPL 2021 #RRvsCSK இந்த 2 மாற்றத்தை செஞ்சு பாருங்க.. வெற்றி உங்களுக்குத்தான்..! முன்னாள் வீரரின் RR அணி தேர்வு

By karthikeyan VFirst Published Oct 2, 2021, 5:47 PM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. ஆர்சிபி அணியும் கிட்டத்தட்ட பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது.ஆனால் கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 4 அணிகளுக்கும் இடையே, 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில், 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி, அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை கணித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. அந்த அணிகளை பார்ப்போம்.

தொடர் வெற்றிகளின் மூலம் ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அதைத்தான் ஆகாஷ் சோப்ராவும் தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஹேசில்வுட்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2 மாற்றங்களை பரிந்துரைத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ரியான் பராக்கிற்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் மயன்க் மார்கண்டேவை எடுக்கலாம் என்றும், கிறிஸ் மோரிஸை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக க்ளென் ஃபிலிப்ஸை ஆடவைக்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ராவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

எவின் லூயிஸ், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோம்ரார், க்ளென் ஃபிலிப்ஸ், ராகுல் டெவாட்டியா, மயன்க் மார்கண்டே, கார்த்திக் தியாகி, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

click me!