#CSKvsRR நல்ல பந்துக்கு அவுட்டாகுறது தப்பு இல்ல; இளம் வீரருக்கு சப்போர்ட் செய்த தோனி! சிஎஸ்கே முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Apr 19, 2021, 7:39 PM IST
Highlights

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்று, 2வது போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்த அணிகள். எனவே அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த போட்டியில் ஆடுகின்றன.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன், சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இரு அணிகளுமே ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யவில்லை. சிஎஸ்கே அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், முதலிரண்டு போட்டிகளிலும் சரியாக ஆடாதபோதிலும், அவர் மீது நம்பிக்கை வைத்து ஆடும் லெவனில் அவர் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனை சரியாக தொடங்காத ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, நல்ல பந்தில் அவுட்டாவது பிரச்னையில்லை(முதல் போட்டியில் ருதுராஜ் மொக்கையாக அவுட்டாகவில்லை. நல்ல பந்தில் தான் அவுட்டானார்). கடந்த ஆண்டே ஏற்ற இறக்கங்களை அவர் கற்றிருப்பார். ஒரு கேப்டனாக, பயிற்சியாளராக ஆதரவுதான் அளிக்க முடியும். களத்தில் அவர் தான் ஆடவேண்டும் என்று தோனி தெரிவித்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், மனன் வோரா, சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனாத்கத், சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

click me!