
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன. துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்த சீசனில் இனிமேல் பிளே ஆஃபிற்கு தகுதிபெறும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணி இழந்துவிட்டது. ஆனால் பிளே ஆஃபிற்கான போட்டியில் கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸும் உள்ளது. எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. டேவிட் மில்லர், ஷாம்ஸி ஆகிய இருவரும் நீக்கப்பட்டு எவின் லூயிஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய இருவரும் கம்பேக் கொடுத்துள்ளனர். இளம் ஃபாஸ்ட் பவுலர் கார்த்திக் தியாகி காயத்தால் இந்த போட்டியில் ஆடாததால், அவருக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோம்ரார், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சக்காரியா, ஜெய்தேவ் உனாத்கத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
சன்ரைசர்ஸ் அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சன்ரைசர்ஸ் அணிக்கு 2016ல் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னர், இந்த சீசனில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவருவதால் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
மனீஷ் பாண்டே மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக முறையே ப்ரியம் கர்க் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஃபாஸ்ட் பவுலர் கலீல் அகமதுவுக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
ஜேசன் ராய், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), ப்ரியம் கர்க், அபிஷேக் ஷர்மா, அப்துல் சமாத், ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் ஷர்மா.