IPL 2023: RR vs GT போட்டி டாஸ் ரிப்போர்ட்..! ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்

By karthikeyan V  |  First Published May 5, 2023, 7:20 PM IST

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்திவரும் இரு பலம் வாய்ந்த அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸும் குஜராத் டைட்டன்ஸும் இன்று மோதுகின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை போலவே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி அணிகளும் தலா 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றிருப்பதால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி அவசியம் தேவைப்படுகிறது. அந்தவகையில் இந்த போட்டி ராஜஸ்தானுக்கு புள்ளி பட்டியலில் மேலேற முக்கியமான போட்டி ஆகும்.

Latest Videos

IPL 2023: இந்த லெட்சணத்துல பேட்டிங் ஆடுனா எப்படி ஜெயிக்கிறது? SRH பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய பிரயன் லாரா

ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா அணியில் இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் ஷர்மா.

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, ஜோஷுவா லிட்டில், முகமது ஷமி, மோஹித் சர்மா.

IPL 2023: அவர் தான்யா சூப்பர் கேப்டன்.. சும்மா மிரட்டுறாப்ள..! ரவி சாஸ்திரி புகழும் கேப்டன் யார் தெரியுமா..?

குஜராத் அணி முதலில் பந்துவீசுவதால் ஆடும் லெவனில் மோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார். சேஸிங்கில் ஷுப்மன் கில் அவருக்கு மாற்றாக இம்பேக்ட் பிளேயராக இறங்குவார்.
 

click me!