RR செய்த ஒரு சின்ன தவறால் மேட்ச்சே போச்சு..! DCக்கு செம லக்.. என்ன சாம்சன் இப்படி பண்ணிட்டீங்களே..?

Published : May 12, 2022, 04:04 PM IST
RR செய்த ஒரு சின்ன தவறால் மேட்ச்சே போச்சு..! DCக்கு செம லக்.. என்ன சாம்சன் இப்படி பண்ணிட்டீங்களே..?

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்த ஒரு சிறிய தவறால் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக தோற்க நேரிட்டது.  

ஐபிஎல் 15வது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவதும் கிட்டத்தட்ட உறுதி. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.  

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸுக்கு இடையே நேற்று நடந்த போட்டி முக்கியமானது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 160 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 161 ரன்கள் என்ற இலக்கை டெல்லி கேபிடள்ஸ் அணி மிட்செல் மார்ஷின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது டெல்லி கேபிடள்ஸ் அணி.

3வது ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய மிட்செல் மார்ஷ் 62 பந்தில் 89 ரன்களை குவித்து டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். டிரெண்ட் போல்ட் வீசிய 3வது ஓவரின் கடைசி பந்தில் போல்ட் எல்பிடபிள்யூவிற்கு அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனும் ரிவியூ எடுக்கவில்லை. பின்னர் ரீப்ளேவில் பார்த்தால் பந்து முதலில் கால்காப்பைத்தான் தாக்கியது என்பது தெளிவாக தெரிந்தது. எனவே அதை ரிவியூ செய்திருந்தால் இன்னிங்ஸின் 3வது ஓவரிலேயே மிட்செல் மார்ஷ் நடையை கட்டியிருப்பார். கேப்டன் சாம்சன் அந்த ரிவியூவை எடுக்காதது டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்ததுடன், போட்டி முடிவே மாறிப்போனது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ T20: இஷான் கிஷன் புயல் வேக ஆட்டம்.. SKY மாஸ் கம்பேக்.. 15 ஓவரில் 209 ரன் சேஸ் செய்த இந்தியா!
IND vs NZ T20: விராட் கோலி சாதனையை அசால்டாக ஓவர் டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா!