
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், இனிவரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவதும் கிட்டத்தட்ட உறுதி. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 11 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே அணி, கடைசி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் வெற்றி தோல்வி சிஎஸ்கேவிற்கு சாதகமாக அமைந்தால் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
இப்படியான முக்கியமான கட்டத்தில் சிஎஸ்கே அணி இன்று மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக எஞ்சிய சீசனிலிருந்து விலகிவிட்டதால், கடந்த போட்டியில் அவருக்கு பதிலாக ஆடிய ஷிவம் துபே தான் இந்த போட்டியிலும் ஆடுவார்.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, உத்தப்பா, துபே, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, பிராவோ, மஹீஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.
உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ராமன் தீப் சிங், டிம் டேவிட், கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், குமார் கார்த்திகேயா, பும்ரா, மெரிடித்.