RR vs DC: மிட்செல் மார்ஷ் அதிரடி அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி

Published : May 12, 2022, 07:49 AM IST
RR vs DC: மிட்செல் மார்ஷ் அதிரடி அரைசதம்.. டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி

சுருக்கம்

ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 161 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரில் அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதிய போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்தது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். டெல்லி அணி 2 மாற்றங்களுடனும், ராஜஸ்தான் அணி ஒரு மாற்றத்துடனும் களமிறங்கின.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 ரன்னிலும் ஆட்டமிழக்க, 3வது விக்கெட்டுக்கு அஷ்வினும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து சிறப்பாக ஆடி 53 ரன்களை சேர்த்தனர். அருமையாக பேட்டிங் ஆடிய அஷ்வின் ஐபிஎல்லில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டிலும் கூட, இதுதான் முதல் அரைசதம்.

அதிரடியாக பேட்டிங் ஆடிய தேவ்தத் படிக்கல் 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை 2 ரன்னில் தவறவிட்டார். சஞ்சு சாம்சன்(6), ரியான் பராக்(9), வாண்டர் டசன் (12) ஆகிய மூவரும் சோபிக்காத காரணத்தால் நல்ல ஃபினிஷிங் கிடைக்காததால் 20 ஓவரில் 160 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

161 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி மிட்செல் மார்ஷ் மற்றும் வார்னரின் அதிரடி அரைசதத்தால் 19வது ஓவரில் இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை.. வருண் 'மிஸ்டரி' ஸ்பின்னில் சிக்கிய நமீபியா.. இந்திய அணி மாபெரும் வெற்றி!
தோனி ரூ.10 லட்சம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.. என்ன காரணம்?