IPL 2022: ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய ஜடேஜா..! சிஎஸ்கேவிற்கு பலத்த அடி

Published : May 11, 2022, 09:23 PM IST
IPL 2022: ஐபிஎல் 15வது சீசனிலிருந்து விலகிய ஜடேஜா..! சிஎஸ்கேவிற்கு பலத்த அடி

சுருக்கம்

காயம் காரணமாக ஐபிஎல் 15வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனின் தொடக்கத்தில் சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் களமிறங்கியது. ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி முதல் 5 போட்டிகளில் தோல்விகளை தழுவியது. ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர் தோல்விகளை தழுவியதன் விளைவாக, கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா.

அதைத்தொடர்ந்து மீண்டும் தோனியின் கேப்டன்சியில் ஆடிவரும் சிஎஸ்கே அணி ஒருசில வெற்றிகளை பெற்றது. 11 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ள சிஎஸ்கே அணி, கடைசி 3 போட்டிகளிலும் ஜெயித்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து பிளே ஆஃபிற்கு பின்புற வாய்ப்பு உள்ளது.

எனவே கடைசி 3 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சூழலில், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளார். காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடிராத ஜடேஜா, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். சிஎஸ்கே அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சூழலில் ஜடேஜா விலகியிருப்பது அந்த அணிக்கு பின்னடைவு.

ஆனால் இந்த சீசனில் ஜடேஜா அவரது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியாமல் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே மிகவும் சராசரியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

MS Dhoni: தோனி எப்போது வருவார்? சிஎஸ்கே கொடுத்த 'சூப்பர்' அப்டேட்.. ரசிகர்கள் ஹேப்பி!
CSK Replacement: ஆயுஷ் மத்ரேக்கு பதில் யார்? CSK-வின் நம்பர் 3 இடத்துக்கு 3 மாஸ் வீரர்கள்!