RR vs DC: டாஸ் ரிப்போர்ட்.. DC அணியில் 2 மாற்றங்கள்..! RR அணியில் ஹெட்மயருக்கு பதில் தரமான வீரர்

Published : May 11, 2022, 07:07 PM IST
RR vs DC: டாஸ் ரிப்போர்ட்.. DC அணியில் 2 மாற்றங்கள்..! RR அணியில் ஹெட்மயருக்கு பதில் தரமான வீரர்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் டெல்லி கேபிடள்ஸும் மோதுகின்றன. பிளே ஆஃபிற்கு முன்னேற இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி இது என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். 

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான டெல்லி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரிப்பல் படேல் மற்றும் கலீல் அகமது ஆகிய இருவரும் நீக்கப்பட்டு முறையே லலித் யாதவ் மற்றும் சேத்தன் சகாரியா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், ஸ்ரீகர் பரத், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்சர் படேல், லலித் யாதவ், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, அன்ரிக் நோர்க்யா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மயருக்கு பதிலாக ராசி வாண்டர் டசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ராசி வாண்டர் டசன், ரவி அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சென்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!