IPL 2022: இந்த சீசனின் சிறந்த கேப்டன் இவர் தான்..! பட்டைய கிளப்புறாப்ள.. ஹர்பஜன் சிங் புகழாரம்

Published : May 11, 2022, 06:17 PM IST
IPL 2022: இந்த சீசனின் சிறந்த கேப்டன் இவர் தான்..! பட்டைய கிளப்புறாப்ள.. ஹர்பஜன் சிங் புகழாரம்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்று ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் தான் மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகின்றன.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் எதிரணிகளை வீழ்த்தி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

குறிப்பாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மிக அருமையாக விளையாடிவருகிறது. லக்னோ அணியை வீழ்த்தியதன் மூலம் முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்துவருகிறார். களவியூகம், பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப், வீரர்களை பயன்படுத்தும் விதம் என அனைத்துமே மிகச்சிறப்பாக செய்து தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறார். இவையனைத்தையும் விட அவரது துணிச்சலும் சிறப்பாக உள்ளது.

சேஸிங்கில் ஜெயிக்கிறோம் என்பதற்காக டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்யாமல் துணிச்சலாக பேட்டிங்கை தேர்வு செய்து, அதிலும் வென்று காட்டுகிறார். அவரது தனிப்பட்ட ஆட்டமும் சிறப்பாக இருக்கிறது. இதற்கு முன் கேப்டன்சியே செய்திராத ஹர்திக் பாண்டியா, கேப்டனாக முதல் தொடரிலேயே சிறப்பாக செயல்பட்டு, தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை இந்த உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்.

ஐபிஎல்லுக்கு முன் காயம் காரணமாக நீண்டகாலமாகவே ஹர்திக் பாண்டியா விளையாடாததால் அவர் எப்படி ஆடப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். பவுலிங்கில் முழு கோட்டாவான 4 ஓவர்களையும் வீசி அசத்துகிறார். 

இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா திகழ்ந்துவரும் நிலையில், இந்த சீசனின் சிறந்த கேப்டன் அவர் தான் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ஹர்திக் பாண்டியா மாதிரியான வீரருக்கு அவரது ஆட்டத்தை ஆட சுதந்திரம் வேண்டும். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அந்த சுதந்திரம் இருப்பதால் ஹர்திக் அங்கு அசத்துகிறார். இந்த சீசனில் என்னை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா தான் சிறந்த கேப்டன். பொறுப்பை தனது தோள்களில் சுமந்து ஆடுகிறார். அவரது முழு பவுலிங் கோட்டாவையும் வீசுகிறார். பேட்டிங்கிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியை முன்னின்று வழிநடத்துகிறார். அவரது அணி வீரர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோரும் ஹர்திக் பாண்டியாவை வெகுவாக புகழ்ந்துள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!