RCB vs RR: தனி ஒருவனாக போராடி அரைசதம் அடித்து RR அணியை கரைசேர்த்த ரியான் பராக்..! ஆர்சிபிக்கு எளிய இலக்கு

Published : Apr 26, 2022, 09:37 PM IST
RCB vs RR: தனி ஒருவனாக போராடி அரைசதம் அடித்து RR அணியை கரைசேர்த்த ரியான் பராக்..! ஆர்சிபிக்கு எளிய இலக்கு

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 144 ரன்கள் அடித்து, 145 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ரஜாத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய்,  ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், டேரைல் மிட்செல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய அஷ்வின், 9 பந்தில் 17 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். செம ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லரை 8 ரன்னில் ஜோஷ் ஹேசில்வுட் வீழ்த்தினார்.

சாம்சன் (27), டேரைல் மிட்செல் (16), ஹெட்மயர்(3) ஆகியோரும் சோபிக்காமல் போக, ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடிய ரியான் பராக், கடைசி 2 ஓவர்களில் பவுண்டரிகள், சிக்ஸர் விளாசி அரைசதம் அடித்து ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 144 ரன்கள் அடிக்க உதவினார். ரியான் பராக் 31 பந்தில் 56 ரன்கள் அடித்தார். 145 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆர்சிபி அணி விரட்டிவருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!