ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி சஹால் சாதனை; டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்து முதலிடம்!

By Rsiva kumar  |  First Published May 12, 2023, 11:02 AM IST

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
 


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 56ஆவது போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, யுஸ்வேந்திர சஹால் கடும் சவாலாக விளங்கினார். அவரது பந்துவீச்சில் கேகேஆர் வீரர்களாக ரன்கள் அடிக்கமுடியவில்லை. சஹால் சுழலில் முதலில் வெங்கடேஷ் ஐயர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேப்டன் நிதிஷ் ராணா 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

யஷஸ்வி ஜெய்ஷ்வால் 98 நாட் அவுட்; கொல்கத்தாவை வீழ்த்தி 3ஆவது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து கேகேஆர் அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அதிரடி வீரர் ரிங்கு சிங் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷர்துல் தாக்கூர் 1 ரன்னில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 4 ஓவர்கள் வீசிய சஹால் 25 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இறுதியாக கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் சஹால் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலமாக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு, வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் தோனி - ஹர்பஜன் சிங்!

இதுவரையில் 142 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்தமாக ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோவின் அதிக விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார். அவர் 161 போட்டிகளில் 183 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரது சாதனையை சஹால் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர் பியூஷ் சாவ்லா 174 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். 4ஆவது இடத்தில் 172 விக்கெட்டுகளுடன் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வீரர் அமித் மிஸ்ரா இடம் பெற்றுள்ளார். 171 விக்கெட்டுகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் 5ஆவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ODI World Cup: முதல் போட்டியில் Ind vs Aus அதுவும் சென்னைல தான்; அக்டோபர் 15ல் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

click me!