IPL 2023: பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி கடைசி பந்தில் ஆர்சிபி த்ரில் வெற்றி

By karthikeyan V  |  First Published Apr 23, 2023, 8:05 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி த்ரில் வெற்றி பெற்றது. 
 


ஐபிஎல் 16வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

Latest Videos

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜோரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி (கேப்டன்), ஃபாஃப் டுப்ளெசிஸ், மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

IPL 2023: தோனி மாதிரியே கேப்டன் கூல் சஞ்சு சாம்சன்..! சாஹல் புகழாரம்

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். இதையடுத்து இறக்கப்பட்ட ஷபாஸ் அகமது 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். 

3வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் - டுப்ளெசிஸ் இணைந்து 117 ரன்களை குவித்தனர். டுப்ளெசிஸ் 39 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 44 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் அவுட்டாகாமல் இருந்திருந்தால் சதமடித்திருக்கலாம். சதத்தை தவறவிட்டுவிட்டார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பின் கடைசி 5 ஓவரில் ஆர்சிபி 33 ரன்கள் மட்டுமே அடித்ததால்  ஆர்சிபியால் 200 ரன்களை எட்டமுடியாமல் 189 ரன்கள் தான் அடித்தது. 

190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். அதன்பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், தேவ்தத் படிக்கல்லும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 2வது  விக்கெட்டுக்கு 98 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 34 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

IPL 2023: ஐபிஎல்லில் அடிச்ச அடி வீண் போகல.. இந்திய அணியில் இடம்பிடிக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்..!

அதன்பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் 22 ரன்களுக்கும் ஷிம்ரான் ஹெட்மயர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கையை விட்டுச்சென்றது. அதன்பின்னர் த்ருவ் ஜோரெல் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றாலும் கூட, அவரால் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. விராட் கோலியின் கேப்டன்சியில் ஆர்சிபி அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்றுள்ளது.
 

click me!