ஐபிஎல் 16வது சீசனில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும், கடைசியிலிருந்து 3ம் இடத்தில் இருக்கும் கேகேஆர் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.
கேகேஆர் அணிக்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற கட்டாயத்துடன் இந்த போட்டியில் ஆடுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
IPL 2023: தோனி மாதிரியே கேப்டன் கூல் சஞ்சு சாம்சன்..! சாஹல் புகழாரம்
வெற்றி கட்டாயத்தில் களமிறங்கும் கேகேஆர் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. லிட்டன் தாஸுக்கு பதிலாக டேவிட் வீசாவும், மந்தீப் சிங்கிற்கு பதிலாக நாராயண் ஜெகதீசனும் களமிறங்குகின்றனர். சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேகேஆர் அணி:
நாராயண் ஜெகதீசன், ஜேசன் ராய், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், சுனில் நரைன், டேவிட் வீசா, குல்வந்த் கெஜ்ரோலியா, சுயாஷ் ஷர்மா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
IPL 2023: ஐபிஎல்லில் அடிச்ச அடி வீண் போகல.. இந்திய அணியில் இடம்பிடிக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்..!
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.