RR vs RCB: ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி இன்று பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 05, 2022, 02:20 PM IST
RR vs RCB: ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி இன்று பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் இந்த போட்டி நடக்கிறது.

இந்த சீசன் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு அருமையாக தொடங்கியுள்ளது. இந்த சீசனில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்குகிறது. 

முதல் 2 போட்டிகளில் ஒரு தோல்வி, ஒரு வெற்றியை பெற்றுள்ள ஆர்சிபி அணியும் வெற்றியை தொடரும் முனைப்பில் தான் களமிறங்குகிறது. 

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Hardik Pandya Trade: தோனியுடன் ரகசிய சந்திப்பா? மும்பையை விட்டு சென்னைக்கு வரும் ஹர்திக் பாண்டியா!
Abhishek Sharma: சரவெடியாக வெடித்து சிதறிய அபிஷேக்..! 91 பந்துகளில் 25 சிக்சர், 233 ரன்கள் குவிப்பு