SRH vs LSG: கேஎல் ராகுல், தீபக் ஹூடா அதிரடி அரைசதம்..! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

Published : Apr 04, 2022, 09:27 PM IST
SRH vs LSG: கேஎல் ராகுல், தீபக் ஹூடா அதிரடி அரைசதம்..! சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த லக்னோ அணி

சுருக்கம்

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 169 ரன்கள் அடித்து, 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

லக்னோ அணியில் இந்த போட்டியில் ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் ஆடுவதால் துஷ்மந்தா சமீரா நீக்கப்பட்டார். சன்ரைசர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், வாஷிங்டன் சுந்தர் வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரின் அடுத்த ஓவரில் எவின் லீவிஸும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.  5வது ஓவரை ரொமாரியோ ஷெஃபெர்டு வீசினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்த மனீஷ் பாண்டே, அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, 27 ரன்களுக்கே லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. பவர்ப்ளேயில் 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் மட்டுமே அடித்தது லக்னோ அணி.

அதன்பின்னர் கேஎல் ராகுலும் தீபக் ஹூடாவும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 4வது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தீபக் ஹூடா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த கேப்டன் ராகுல் 50  பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஆயுஷ் பதோனி 12 பந்தில் 19 ரன்களும்,  ஹோல்டர் 3 பந்தில் 8 ரன்களும் அடித்து முடிக்க, 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த லக்னோ அணி, 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sakib Hussain Net Worth: முதல் மேட்ச்லயே 4 விக்கெட்! யார் இந்த சகிப் ஹுசைன்? சொத்து மதிப்பு எவ்வளவு?
Sakib Hussain: 'ஷூ வாங்க காசு இல்ல'னு அழுத மகன்.. நகையை விற்ற தாய்! SRH வீரரின் பகீர் பின்னணி..