
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று நடக்கும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். எனவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த சிறந்த ஆல்ரவுண்டரான ஜேசன் ஹோல்டர் அணியில் இணைந்ததால், துஷ்மந்தா சமீரா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, எவின் லூயிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.