IPL 2021 RR - MI இடையே நீயா நானா போட்டி..! தலையெழுத்தை தீர்மானிக்கும் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

By karthikeyan VFirst Published Oct 5, 2021, 2:38 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. 4வது இடத்தை பிடிக்க கேகேஆர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 3 அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த 3 அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும் நிலையில், இன்று அதில் 2 அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி, பிளே ஆஃபுக்கான போட்டியிலிருந்து ஒரு அணியை நீக்கிவிடும். ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை தலா 12 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளன. எனவே இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கும்.

நீயா நானா என்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இதையும் படிங்க - அது கண்டிப்பா அவுட்டு தான்..! சர்ச்சை சம்பவம் குறித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 190 ரன்களை 18வது ஓவரிலேயே சேஸ் செய்து அபார வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, க்ளென் ஃபிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ஆகாஷ் சிங், மயன்க் மார்கண்டே, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் மும்பை அணி ஆடும்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் எங்களுக்கு டஃப் கொடுக்கவல்ல அணி இதுதான்..! இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ், நேதன் குல்ட்டர்நைல், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா. 
 

click me!