அது கண்டிப்பா அவுட்டு தான்..! சர்ச்சை சம்பவம் குறித்து பேசிய ஆஷிஸ் நெஹ்ரா

By karthikeyan VFirst Published Oct 4, 2021, 6:43 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் தேவ்தத் படிக்கல்லுக்கு டிவி அம்பயர் நாட் அவுட் கொடுத்த சர்ச்சை சம்பவம் குறித்த தனது கருத்தை கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா.
 

ஐபிஎல் 14வது சீசனில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதம் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் சிறப்பான பேட்டிங்(40) ஆகியவற்றால் பேட்டிங்கிற்கு சவாலான ஷார்ஜா ஆடுகளத்தில் ஷார்ஜாவில் 20 ஓவரில் 164 ரன்கள் அடித்து, பஞ்சாப்பை 158 ரன்களுக்கு சுருட்டி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் டிவி அம்பயரின் முடிவு பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது. ஆர்சிபி இன்னிங்ஸின் 8வது ஓவரில் ரவி பிஷ்னோய் வீசிய 3வது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடமுயன்றார் படிக்கல். ஆனால் பந்து கையுறையை உரசிச்சென்றது. அதை கேட்ச் பிடித்த பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான ராகுல் அப்பீல் செய்ய, அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் எங்களுக்கு டஃப் கொடுக்கவல்ல அணி இதுதான்..! இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஓபன் டாக்

பந்து கண்டிப்பாக பேட்டையோ கையுறையையோ உரசியது என்று உறுதியாக நம்பிய ராகுல், உடனடியாக ரிவியூ செய்தார். அதை ரிவியூ செய்த டிவி அம்பயர், பந்து கையுறையில் உரசிச்சென்றதை பரிசீலிக்காமல், பேட்டில் படவில்லை என்பதை மட்டுமே கருத்தில்கொண்டு, நாட் அவுட் என்று கூறிவிட்டார். பந்து கையுறையை கடந்தபோது, அல்ட்ரா எட்ஜில் தெளிவான ஸ்பைக் தெரிந்தது. ஆனாலும் டிவி அம்பயர் அவுட் கொடுக்கவில்லை.

அல்ட்ரா எட்ஜில் ஸ்பைக் தெரிந்ததை சுட்டிக்காட்டி கள நடுவரிடம் நியாயம் கேட்டார் ராகுல். ஆனால் அது எடுபடவில்லை. இதையடுத்து ராகுலும் பஞ்சாப் கிங்ஸ் அணியினரும் அதிருப்தி அடைந்தனர்.

இதையும் படிங்க - IPL 2021 SRH வீரர்களும் தூக்க மாத்திரையும் ஒண்ணு..! அவங்க பேட்டிங் ஆடும்போது தூங்கிட்டேன்..! சேவாக் செம கலாய்

இந்நிலையில், அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஆஷிஸ் நெஹ்ரா, என்னை கேட்டால் அது அவுட்டுதான்; அதில் சந்தேகமே இல்லை. ஸ்க்ரீனில் ஸ்பைக் தெளிவாக தெரிந்தது. ராகுல் அருமையாக கேட்ச் பிடித்தார். ஆனால் 3வது அம்பயர் நாட் அவுட் கொடுத்துவிட்டார் என்று ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்தார்.
 

click me!