IPL 2021 SRH வீரர்களும் தூக்க மாத்திரையும் ஒண்ணு..! அவங்க பேட்டிங் ஆடும்போது தூங்கிட்டேன்..! சேவாக் செம கலாய்

By karthikeyan VFirst Published Oct 4, 2021, 4:30 PM IST
Highlights

கேகேஆருக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் ஆடிய விதம், தூக்கத்தை வரவழைத்ததாக வர
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கே, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் முதல் 2 அணிகளாக பிளே ஆஃபிற்கு முன்னேறின. ஆர்சிபி அணியும் 3வது அணியாக முன்னேறியது. 4வது அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேற, கேகேஆர், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் கடும் போட்டியிட்டு வருகின்றன.

இப்படியாக 7 அணிகளும் தொடரில் இருக்க, சன்ரைசர்ஸ் அணி மட்டும் பாதி தொடரிலேயே தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவதை உறுதி செய்துவிட்டது. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி படுமோசமாக ஆடியது. சீசனின் இடையே வார்னர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் வில்லியம்சனின் கேப்டன்சியிலும் சன்ரைசர்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது.

சன்ரைசர்ஸ் அணி எப்போதுமே பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்காது. அந்த அணியின் பலமே அதன் பவுலிங் தான். எவ்வளவு குறைவான ஸ்கோர் அடித்தாலும், இருக்கிற ஸ்கோரை வைத்து எதிரணிக்கு டஃப் கொடுக்கும் சன்ரைசர்ஸ். அப்படித்தான் கேகேஆருக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் நடந்தது. 

கேகேஆருக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, படுமோசமாக பேட்டிங் ஆடியது. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அப்துல் சமாத் ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே ஓரளவிற்குக்கூட ஆடவில்லை.

நன்றாக ஆடிய வில்லியம்சன் 26 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அப்துல் சமாத் 18 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் அடித்தார். பிரியம் கர்க் 31 பந்தில் 21 ரன்கள் அடித்தார். ஜேசன் ராய்(10), ரிதிமான் சஹா(0), அபிஷேக் ஷர்மா(6), ஜேசன் ஹோல்டர்(2) ஆகியோர் படுமோசமாக சொதப்பியதால், 20 ஓவரில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது சன்ரைசர்ஸ் அணி. ஆனால் அந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு, 116 ரன்கள் என்ற இலக்கை கடைசி ஓவரின் 4வது பந்து வரை கொண்டு சென்றது சன்ரைசர்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் அணி மந்தமான பேட்டிங்கிற்கு பெயர்போன அணியாக திகழும் நிலையில், கேகேஆருக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் பேட்டிங் தூக்கத்தை வரவழைத்ததாக தெரிவித்துள்ளார் சேவாக்.

சன்ரைசர்ஸ் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், ஹைதராபாத் அணியில் ராய், சஹா விரைவில் வெளியேறினர். வில்லியமச்ன், கர்க் நன்றாக ஆடினர். அப்துல் சமாத் 3 சிக்ஸர்களை விளாசினர். 25 ரன்களில் அவரும் அவுட்டாகிவிட்டார். கடைசி 4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் தூக்க மாத்திரை போட்டதை போல தூக்கத்தை வரவழைத்தது. நானும் தூங்கிவிட்டேன். திடீரென விழித்து பார்த்தால் சன்ரைசர்ஸ் அணியின் இன்னிங்ஸ் முடிந்து, ஸ்கோர் 115/8 என்று காட்டியதாக சேவாக் தெரிவித்துள்ளார்.
 

click me!